Sbs Tamil - Sbs

  • Author: Vários
  • Narrator: Vários
  • Publisher: Podcast
  • Duration: 150:17:16
  • More information

Informações:

Synopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodes

  • நாட்டில் யூத எதிர்ப்பு சம்பவங்கள் அதிகரிப்பது குறித்த விமர்சனங்களை பிரதமர் நிராகரித்தார்

    31/01/2025 Duration: 04min

    ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள் :31 ஜனவரி 2025 வெள்ளிக்கிழமை.

  • Dementia - மறதிநோய் வராமல் தடுக்க முடியுமா?

    30/01/2025 Duration: 06min

    நாட்டில் பல லட்சம் ஆஸ்திரேலியர்கள் மறதிநோயுடன் வாழ்கின்றனர். நான்கு முக்கிய வாழ்க்கை முறை மாற்றங்களை செய்வதன் மூலம் மறதிநோய் வருவதை தாமதப்படுத்தலாம் என புதிய மருத்துவ ஆய்வு முயற்சி ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்

    30/01/2025 Duration: 08min

    எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்களை கைது செய்ய முற்பட்ட வேளையில் இலங்கை கடற்படையின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இரு மீனவர்கள் காயமடைந்துள்ளார்கள். மூத்த தமிழ் தலைவர் மாவை சோனதிராசா மறைந்தார். சுதந்திர தின நிகழ்வுகளை புறக்கணிக்க காணாமலாக்கப்பட்டோர் சங்கம் கோரிக்கை. அவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • சிட்னியில் வெடிபொருட்கள் நிரம்பிய caravan கண்டுபிடிப்பு: பிந்திய தகவல்கள்

    30/01/2025 Duration: 02min

    சிட்னியின் வடமேற்கிலுள்ள Dural பகுதியில் வெடிபொருட்கள் நிறைந்த ஒரு caravan கண்டுபிடிக்கப்பட்டமை குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • சமையல் நன்றாக வருவதன் ரகசியம் என்ன? - Chef தாமு பதில்

    30/01/2025 Duration: 13min

    தமிழகத்தின் புகழ் மிக்க சமையல்கலைஞர்களில் ஒருவர் தாமு அவர்கள். அவருக்கு சமீபத்தில் இந்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது. சமையல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள சமையல்கலைஞர் தாமு அவர்கள் 2022-ஆம் ஆண்டுஆஸ்திரேலியா வருகை தந்திருந்த போது சமையல் துறையில் அவரின் பயணம் மற்றும் அவர் எதிர்கொண்டு வரும் சவால்கள் குறித்து செல்வியுடன் உரையாடியிருந்தார். அந்நிகழ்ச்சியின் மறு ஒலிபரப்பு இது.

  • நாட்டின் பணவீக்கம் வீழ்ச்சி - வட்டி வீதம் குறையுமா?

    30/01/2025 Duration: 05min

    நாட்டின் பணவீக்கம் மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. ஆகவே இந்த ஆண்டு நடைபெறவுள்ள பெடரல் தேர்தலுக்கு முதல் வட்டி வீதம் குறையும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Anna Henderson மற்றும் Sophie Bennett இணைந்து தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி

  • Coles மற்றும் Woolworths மீதான நம்பகத்தன்மை வீழ்ச்சி - ஆய்வு முடிவு

    30/01/2025 Duration: 06min

    Roy Morgan நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பில், Coles மற்றும் Woolworths மீதான அவநம்பிக்கை வியத்தகு அளவில் வளர்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களின் விலை நிர்ணய நடைமுறைகள் மீதான விமர்சனங்கள் அதிகரித்து வரும் வேளையில் இந்த கருத்துக்கணிப்பு வெளிவந்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • Northern Territory சிறைசாலைகளில் கூட்ட நெரிசலினால் அவதியுறும் கைதிகள்!

    30/01/2025 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய ( வியாழக்கிழமை 30/01/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

  • உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு எந்த இடம்?

    29/01/2025 Duration: 02min

    விசா இல்லாமல் எத்தனை நாடுகளுக்குப் பயணம் செய்யலாம் என்பதன் அடிப்படையில் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்/கடவுச்சீட்டுகள் எவை என்ற புதிய பட்டியல்- Henley Passport Index வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • மதுரையில் கைவிடப்பட்ட டங்க்ஸ்டன் சுரங்கம்-பிந்திய தகவல்கள்!

    29/01/2025 Duration: 08min

    தமிழ்நாட்டில் இரும்பு பயன்பாடு பற்றிய தொல்லியல் ஆய்வு, மதுரையில் கைவிடப்பட்ட டங்க்ஸ்டன் சுரங்கம், பிரபாகரன் - சீமான் சந்திப்பு சர்ச்சை பற்றிய செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • இரும்பின் தொன்மை: தமிழ்நாட்டில் தொடங்கியதா?

    29/01/2025 Duration: 29min

    தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4,200 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததாக முன்னர் கருதப்பட்டது. ஆனால், தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை ஆகிய இடங்களில் கிடைத்த, இரும்பினாலான தொல் பொருட்களை ஆய்வு செய்த போது அவற்றின் காலம் கி. மு. 3,345 வரை செல்வதாக தமிழக தொல்லியல் துறை வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

  • பெர்த் நகர தமிழர்கள் அனைவரும் இணைந்து மாபெரும் பொங்கல் விழா

    29/01/2025 Duration: 07min

    மேற்கு ஆஸ்திரேலியாவில் இயங்கும் அனைத்து தமிழ் அமைப்புகளும் இணைந்து பெர்த் நகரில் “பொங்கல் – தமிழர் அறுவடைத் திருநாள்” என்ற கருப்பொருளில் பிப்ரவரி 15 சனிக்கிழமையன்று கண்கவர் பொங்கல் விழாவை நடத்த முனைப்புடன் தயாராகி வருகின்றன.

  • சீனாவின் புதிய AI DeepSeek-இன் அறிமுகத்தால் அமெரிக்க பங்குச் சந்தை சரிவு!

    29/01/2025 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய ( புதன்கிழமை 29/01/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

  • 2024-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதை வென்றார் பும்ரா!

    28/01/2025 Duration: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 28/01/2025) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.

  • நியூ சவுத் வேல்ஸ் காலனியைக் கட்டியெழுப்பிய கேணல் லக்லான் மக்குவாரி

    27/01/2025 Duration: 03min

    காலத்துளி நிகழ்ச்சியில் நியூ சவுத் வேல்ஸ் காலனியைக் கட்டியெழுப்பிய கேணல் லக்லான் மக்குவாரி குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.

  • Medal of the Order of Australia (OAM) recipient Dr Samantha Pillay - ஆஸ்திரேலிய அரசின் அதியுயர் விருது பெறும் தமிழ்ப்பின்னணி கொண்ட Dr சமந்தா பிள்ளை

    27/01/2025 Duration: 09min

    Dr Samantha Pillay received Medal of the Order of Australia (OAM) in the General Division for her service to urology. Dr Samantha Pillay is a surgeon, entrepreneur, international five-time Amazon No. 1 best-selling, multi-award-winning author, multi-award-winning AI film and AI music producer and director, and speaker. - சிறுநீரகவியல் துறையில் அவரது சேவைக்காக Dr சமந்தா பிள்ளை அவர்களுக்கு ஆஸ்திரேலிய அரசு வழங்கும் அதியுயர் விருதுகளில் ஒன்றான OAM விருது இந்த வருடம் வழங்கப்பட்டது. Dr சமந்தா பிள்ளை ஒரு அறுவை சிகிச்சை நிபுணர், தொழில் முனைவோர், பல விருதுகளை வென்ற எழுத்தாளர், இசை மற்றும் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் பேச்சாளர்.

  • 76 முறை மனைவியைக் கத்தியால் குத்தியவர் சிறை செல்லாமல் தப்பியது எப்படி?

    27/01/2025 Duration: 05min

    தெற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள Findon என்ற இடத்தில் வசித்து வந்த Maria Dimasi என்ற 85 வயதான பெண்ணை 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவரது கணவர் 76 முறை கத்தியால் குத்தி கொலை செய்திருந்தார்.

  • Celebrating, reflecting, mourning: Indigenous and migrant perspectives on January 26 - SBS Examines : ஜனவரி 26 ஆஸ்திரேலிய தினம் - கொண்டாட்டமா? துக்கமா?

    26/01/2025 Duration: 06min

    Some celebrate Australia Day with patriotic pride, others mourn and protest. What’s the right way to mark January 26, and can you have pride in your country while also standing against injustice? - ஆஸ்திரேலிய வரலாற்றில், ஜனவரி 26 1788 -இல் first fleet கப்பல் ஆஸ்திரேலியாவில் தரையிறங்கி முதல் பிரிட்டிஷ் காலனியை நிறுவியது. இது ஆஸ்திரேலியாவின் காலனித்துவத்தின் தொடக்கமாகும், இதுவே பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களுக்கு எதிரான பரவலான வன்முறையின் ஆரம்பமாகவும் பார்க்கப்படுகிறது.

  • How do heatwaves highlight inequality? - SBS Examines : சிட்னியின் சில புறநகரங்கள் மற்றவற்றை விட மிகவும் வெப்பமாக இருப்பது ஏன்?

    24/01/2025 Duration: 06min

    In the midst of one of the hottest Australian summers on record, experts say heat inequality is deepening social division. - ஆஸ்திரேலியர்கள் மிகவும் வெப்பமான கோடைகாலத்தின் மத்தியில் உள்ளனர். ஆனால் கோடை வெயில் மற்றவர்களை விட சிலருக்கு அதிக வெப்பமாக இருக்கிறது.

  • What is Zionism, and is it antisemitic to be anti-Israel? - சையோனிசம் (Zionism) என்றால் என்ன, இஸ்ரேலுக்கு எதிராக இருப்பது யூத எதிர்ப்பா?

    18/01/2025 Duration: 10min

    Reports of anti-Jewish incidents in Australia are on the rise. But there's disagreement on where to draw the line between antisemitism and anti-Zionism. - ஆஸ்திரேலியாவில் யூத எதிர்ப்பு சம்பவங்கள் பற்றிய தகவல்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால் யூத எதிர்ப்பிற்கும் சையோனிச எதிர்ப்பிற்கும் இடையில் எங்கு கோடு வரைய வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.

page 58 from 59